மரம் சும்மா இருந்தாலும் காற்றும் விடுவதில்லை! மகாவலியும் தமிழரை விடுவதில்லை!
மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை எனக் கூறப்படும் கொன்பூசியஸ் தத்துவங்களில் ஒன்று போல வடக்கு கிழக்கை வேண்டுமென அசைக்கப்படும் காற்று தெற்கில் இருந்து வீசத்தான் செய்கிறது.
இதனால் தமிழர்களின் அரசியல் பரப்பில் தற்போது கிவுல் ஒயா என்ற விடயம் முன்னிலைப்படுகிறது.
இலங்கையின் நீர்முகாமைத்துவத்தை சரி வர செய்யவேண்டுமானால் வடக்கு கிழக்குக்கும் மகாவலி ஆற்றின் பலன்கள் கிட்டுவது அவசியம் என்றாலும்; இந்த திட்ட வழங்கும் உதவியை விட அதன் ஊடாக வரக்கூடிய எதிர்கால உபத்திரவங்களை குறிப்பாக எதிர்காலத்தில் வரக்கூடிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் தமது இனப்பரம்பல் மாற்றியமைக்கப்படும் என தமிழர்கள் அஞ்சுகிறார்கள்.
2345 கோடி ரூபா செலவில் மணலாற்றில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள குடியேற்றத்திட்டங்களுக்கு சுழிபோடுவதாக கருதப்படும் திட்டத்துக்கு அநுரவின் அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அனுமதிவழங்கியுள்ளதால் விடயம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அநுர தரப்பு என்னதான் நல்லிணக்கம் காட்டினாலும் ஏற்கனவே சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தின் துணையுடன் கொண்டு வடக்கு கிழக்கை துண்டாடிய வரலாற்று கைங்கரியத்தை தமிழர்களுக்கு செய்த அதே ஜேவிபியின் அரசாங்கத்தின் கிபுல் ஓயா திட்டத்தின் மீது தமிழர்களின் வினா எழுப்பத்தலைப்படுவது விழிப்பே பிரதானம் என்ற அடிப்படையில் கூட வரலாம்.
இந்த நிலையில் இந்த விடயத்தையும் தொட்டுவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |