தமிழர்களுக்கு தமிழீழம் சாத்தியமே இல்லை! சிங்களவர்களுடன் தான் தீர்வு என்கிறார் சுரேன் சுரேந்திரன்
ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்களுடனையே தீர்வு எனவும் தனிநாடு தமிழீழம் என்ற விடயங்களுக்கு சாத்தியமே இல்லை என்று உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் சிங்கள பௌத்த பிக்குகளை சந்தித்து பேசிய உலகத்தமிழர் பேரவை இமயமலைப்பிரகடனம் என்ற ஒன்றினையும் வெளியிட்டிருந்த விடயம் தாயகத்திலும் புலத்திலும் மிகப்பெரும் விமர்சன அலைகள் ஏற்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் குறித்த பிரகடனமும் அதுதொடர்பான பேச்சுகளும் ஈழத்தமிழர்களின் சுதந்திர தேச அபிலாசைகளுக்கு எதிரானது என்ற கருத்தே பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழலில் உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்ததாவது,