தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம்
P Ariyanethran
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Dhilak
தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த பிரசார பயணமானது, நாளையதினம் (23) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நாளை நகரும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.
மக்களின் அழைப்பு
தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிற்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரச்சாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரசாரப் பணிகளும் திட்டமிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்