கனடாவில் தமிழின படுகொலை நினைவுத்தூபி : இலங்கையில் ஏற்பட்ட அதிர்வுகள்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த மண்ணில் நீதி மறுக்கப்படும்போது தாம் புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் அதனை வெளிப்படுத்துவது அவர்களுக்கு ஒரு ஆறுதலை , நிம்மதியை தருகிறது.
இதைத்தான் கனடா அரசு ஈழத்தமிழர்கள் சார்பில் செய்துள்ளது.
இவவாறு அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் பல விடயங்களை விரிவாக அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழ் சமகாலம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
