ஓய்ந்து போன ஒரு ஊடகரின் பயணம்..!
ஊடகம் என்பது ஒரு சமூகத்தின் மீதாக ஆழப்பதிந்து வேரூன்றிக்கிடக்கும் கிடக்கும் பேச மறந்துபோன அல்லது பேசமறுக்கப்படுகின்ற விடயங்களை வெளியுலகக்கண்களில் பக்கச்சார்பின்றி காட்சிபடுத்தவேண்டிய கடப்பாடுடைய ஒரு வழிவகையாகும்
அந்த வகையில் ஊடகத்தின் பக்கம் நின்று உண்மையை உள்ளபடி வாசகர்களாக நேயர்களாக இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆத்மார்த்தமான பணிகளை சிரமேற்கொண்டு அந்த ஊடக வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்த ஊடகர்கள் ஏராளம் நம்மிடையே உண்டு
அவர்களில் ஒருவராக இடமிகுந்த ஈழத்தமிழர்களின் கடந்த காலங்களை ஊடக வாயிலாக சர்வதேச சமூகத்தின் படலையைத்தட்டிச்சொன்ன ஒருவராக மறைந்த வாழ்நாள் ஊடகர் பொ. மாணிக்கவாசம் தனக்கான ஒரு காத்திரமான இடத்தை ஈழத்தமிழர்களின் ஊடகவரலாற்றில் பதிவுசெய்துகொள்கிறார்
தனது மிக நீண்ட ஊடகப்பயணத்தில் உன்னதமான பணியாற்றியிருக்ககூடிய இவர் அன்றைய போர்க்காலங்காலங்களில் தினம் தினம் எதிர்பார்த்துக்கத்திக்க கூடிய ஒருவாக தன்னை வரித்துக கொண்ட ஆளுமை என்றே சொல்லாம்
பேரளவில் வருமானமில்லாத உயிர் அச்சுறுத்தல் நிறைந்த ஊடகப்பணியில் அதன் கரடுமுரடாண பாதையில் தனக்கான பணியை காத்திரமான முறையில் நிறைவேற்றியிருக்கூடிய உயர் ஊடக ஆளுமையான பொ. மாணிக்கவாசகம் உடல்நலக்குறைவால் இன்று 12.04.2023 ஊடக உலகை நீத்தார்
காலத்தின் பக்கங்களில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் நேசித்த ஊடக வாழ்வுக்காகவும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற ஓர்மத்துடனும் சுமார் நான்கு தசாப்பதங்களுக்கு அதிகமாக ஊடகப்பணியாற்றிய திரு . பொ . மாணிக்கவாசகம் அவர்களின் இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஊடக உலகிற்கும் Ibc தமிழ் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது
