32 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழர் காணிகள்
Sri Lanka Army
Sri Lankan Tamils
Batticaloa
By Sumithiran
மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள், 32 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (06) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, கையளிக்கப்பட்டன.
கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராட்சி,காணியை ஒப்படைக்கும் ஆவணத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்ராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.
உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

அதைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களை இனங்கண்டு உரியவர்களிடம் விடுவிக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான 8.6 ஏக்கர் காணியை ஒப்படைக்கும் நடவடிக்கைக்காக, மாவட்ட அரசாங்க அதிபரால் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
59 தனிநபர்களுக்கு சொந்தமான காணிகளே, இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி