நிரந்த தீர்வு இன்றி தொடரும் தமிழர் படுகொலைகள்! ஐ.நா.ம.உ ஆணையாளருக்கு சென்ற கடிதம்
People
UN
SriLanka
Tamil People
SL Tamil
UN Commissioner
By Chanakyan
இலங்கையில் நீடித்துவரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையினால் தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமமானது என தமிழ்க் கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கும் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் பொதுவாக்கெடுப்பு அவசியம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
