நாடாளுமன்ற சோற்று உரிமைக்குரல் விகாரைக்காக நல்லூரை இடிக்க சொல்லலாமா?
சிறிலங்கா நாடாளுமன்ற உணவுச்சாலையில் சோறுகறி சரியில்லையென காட்டுக்கத்தில் கத்தி தனது சோற்று உரிமைக்காக குரல்கொடுத்து தன்னை ஒரு பிரித்நூல்கட்டிய தமிழராக அடையாளப்படுத்தும் எம்பிக்கு தமிழர்களின் இருப்பு குறித்த உரிமை துச்சமாக தெரிகிறது.
இதனால் தானோ என்னவோ தையிட்டியில் திஸ்ஸ விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும் யாழ் கிறிஸ்வத தேவாலயத்தை உடைக்க வேண்டும் என்ற அவரது புரிதல் மல்லுக்கட்டுவருகிறதுபோலும்
ஆனால் இலங்கையில் இவ்வாறான மல்லின மல்லுக்கட்டல்கள் வந்தாலும் தித்வா சூறாவளியின் தாக்கத்துக்குப்பின்னரான இலங்கையை மையப்படுத்தி பூகோள ஆட்டங்கள் தீவிரமடைகின்றன.
இதனால் இந்திய பிரதிநிதியும் சீனப்பிரதிநிதியும் ஒரேநாளில் நாளை சிறிலங்கா அரசதலைவர் அனுரவை சந்தித்து பேசி இந்துமாகடல் கேந்திர இலங்கை தமக்கு தமக்கு தேவை என்பதை குறியீடாக காட்டத்தயாராகின்றனர்.
இதேபோல வோசிங்ரனில் இருந்து டொனல்ட் ரம்பும் இலங்கை குறித்த தனது ராஜதந்திர நிலைப்பாட்டை 2.0 நிலைக்கு மறுவடிவமைத்து வருவதற்கு அடையதளமாக இலங்கை உட்பட்ட 29 நாடுகளில் ஜோ- பைடன் கால ராஜதந்திரிகளை தூக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு ..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |