கொழும்பில் நாளை மாபெரும் போராட்டம்
colombo
attack
protest
By Vanan
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் செயலகம் முன்பாக நாளை (24) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டால் பெரிதும் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அவலம் உட்பட ஏனைய மாவட்ட அவலங்களையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த எதிர்ப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் மலையக கட்சிகளின் ஒத்துழைப்பும் நாடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முற்பகல் 11 மணியில் இருந்து ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்