எல்லைதாண்டிய மீன்பிடி - தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம் (28) இரவு சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் ஐந்து படகுகளை மடக்கிப் பிடித்த கடற்படையினர் படகில் இருந்த 24 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
சட்டவிரோத மீன்பிடி
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் நீரியல் வளத்துறையினரால், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 24 மீனவர்களும் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில்நீதவான் உத்தரவிட்டார்.
You may Like this