இனியும் கூட்டமைப்பால் சாதிக்க இயலுமா? ஆனந்தசங்கரி சவால்

tamil geneva alliance national
By Vasanth Feb 05, 2021 05:09 AM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு சென்று சாதிக்க போவது எதுவுமேயில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் - இறுதி யுத்தத்தை தானே நடத்தி முடித்தேன் என்று பகிரங்கமாக அறிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூடிக் குலவிய கூட்டமைப்பினர், உண்மைத் தன்மையை ஏன் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை? இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகளுக்கும், வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்று சரத் பொன்சேகாவை கேட்டிருந்தால் தெள்ளத்தெளிவாக விபரங்களைக் கூறியிருப்பார்.

நல்லாட்சி காலகட்டத்தில் நடந்த ஜெனீவா அமர்வில் இதனை எடுத்துக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையையும் எடுத்திருக்கலாம். இதனை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லை? பிரதான எதிர்கட்சியாக இருந்தும், வரவு செலவுத் திட்டம் அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்த அவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் சம்பந்தமாக ஒரு நிபந்தனையை வைத்து ஏன் செயற்படவில்லை? ஏதோ ஒரு காரணத்திற்காக நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் சோரம் போய் விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

விடுதலைப் புலிகளை அழித்து, யுத்தத்தை முடித்து வைத்தது தானே என்று சரத்பொன்சேகா கூறிய பின்பும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவிற்கு வீடுவீடாக சென்று கூட்டமைப்பினர் வாக்குகளை சேகரித்து கொடுத்தார்கள்.

இதன் மூலம் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது சரி என்ற நிலைப்பாட்டில்தான் கூட்டமைப்பினர் இருந்துள்ளார்கள் என்பது விளங்குகிறது. அதற்கு நன்றிக்கடனாகவே ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதிகளவு தமிழ் மக்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள்தான் என்று, அறிக்கைகளையும் வெளியிட்டு புலிகளையும் யுத்தக் குற்றத்திற்காக விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.

இதன் மூலம் ஜெனீவாவிற்கு விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா நடத்திய யுத்தம் நியாயமானது என்ற ஒரு செய்தியையும் ஜெனீவாவிற்கு ஏற்கனவே கூட்டமைப்பினர் அறிவித்து விட்டார்கள்.

யுத்தம் நடத்தியது சரியானது, விடுதலைப் புலிகளைத்தான் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஜெனீவாவிற்கு கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதனை மக்கள் சரி என ஏற்றுக் கொண்டபடியால் தான் அவர்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

ஜெனீவாவிற்கு வருடா வருடம் காவடி தூக்கும் நிகழ்வாக இதனை எடுத்துக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களால் ஜெனீவாவிற்கு போய் நீதி கேட்க முடியாது. மனித உரிமை மீறல்கள் பற்றி எவரிடமும் பேச முடியாது.

ஆனால் 2014ஆம் ஆண்டு நான் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் போராளிகள், அவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ஒரு அரசாங்கம் யுத்த மரபுகளை மீறிச் செயற்பட முடியாது என குறிப்பிட்டிருந்தேன்.

அவ்வாறு நான் சொன்னது தவறு என்பதால் தான் எனக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

விடுதலைப் புலிகளையும் யுத்தக் குற்றத்திற்காக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்து, மக்கள் எனது தவறை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

கூட்டமைப்பினர் 2004ஆம் ஆண்டில் அனைத்து அடிப்படை மனித உரிமை மீறல்களையும் நடத்தி தேர்தல் ஜனநாயகத்திற்கு முற்று முழுதாக எதிராக செயற்பட்டு, வெற்றியை பெற்றுக் கொண்டவர்கள்.

இவர்கள் எவரிடமும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை எடுத்துக் கூறவும் முடியாது, தட்டிக் கேட்கவும் முடியாது. 2004ஆம் ஆண்டு தெரிவான எம்.பிக்கள் தான் இன்று வெவ்வேறு கட்சிகளில் இருந்து செயற்படுகின்றார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து செயற்பட்ட போது கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டு, இன்று யுத்த இழப்பின் அனர்த்தங்களைப் பற்றிப் பேசி ஜெனீவா வரை எடுத்து செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இவ்வாறானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் என்று நான் நம்பவில்லை.

ஆகையினால் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க போவதில்லை என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023