சீ. வீ. கே. சிவஞானத்திடமிருந்து கடிதம் கிடைக்கவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் (C.V.K.Sivagnanam) அனுப்பினார் என்று கூறப்படும் எந்தவொரு கடிதமும் எமக்குக் கிடைக்கவில்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி. ஆர். எல். எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் அனுப்பினார் என்று கூறப்படும் விடயம் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் “அவ்வாறான கடிதம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் நலன் கருதி ஒன்றிணைந்து
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C.V.K. Sivagnanam), ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) ஆகியோருக்கு சி.வி.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது தொடர்பானது.
இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது.
தனித்துப் போட்டியிடும் சூழல்
இது சம்பந்தமாக கலந்துரையாட 02/3/2025 ஆம் திகதியை செல்வம் அடைக்கலநாதன் உடன் நிர்ணயித்திருந்தோம். எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தாங்கள் எமது கட்சியைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை 23/2/2025 ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் அமைந்தது.
இது எமக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியமை இயல்பானதும் தவிர்க்க முடியாதாதமாகும். நாம் இந்த முயற்சியை மேற்கொண்டது தனிய தேர்தலுக்காக அல்ல.
எமது முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஆகும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த முயற்சியை மேலும் தொடரவே விரும்புகிறேன் இதற்கான தங்களது இணக்கம் இருக்குமானால் நாம் தொடர்ந்து பேசலாம்.
அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு- கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னரே ஏற்பாடு செய்தல். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம். தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
