பிரதமர் மோடியுடனான நேரடி சந்திப்பு : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு

Gajendrakumar Ponnambalam Rajavarothiam Sampanthan Narendra Modi C. V. Vigneswaran
By Vanan Sep 13, 2023 02:31 PM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திப்பதற்கான முயற்சியை கூட்டாக மேற்கொள்வதற்கான அழைப்பை விடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியப் பிரதமரும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கு இணக்கம் வெளியிடுவார் என சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்., தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியுடனான நேரடி சந்திப்பு : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு | Tamil National Parties Direct Meeting With Pm Modi

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் அடுக்கடுக்காக காணப்படும் உடலங்கள்(இரண்டாம் இணைப்பு)

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் அடுக்கடுக்காக காணப்படும் உடலங்கள்(இரண்டாம் இணைப்பு)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்பது பயனுள்ளதாக இருக்குமா என தாம் யோசனை செய்வதாக இந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தம்மை சந்திக்க நரேந்திர மோடி சம்மதிப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கென புதுடில்லி செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் நரேந்திர மோடி தென்மாநிலங்களுக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர் என்ற போதிலும், அரசமைப்பிலுள்ள விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் தற்போதைய தருணத்தில் உணர்ந்துகொள்வார் என நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு நடவடிக்கைக்கான ஒப்புதல்

புலம்பெயர்ந்தவர்களின் தனி இராஜ்ஜியம் : யூதர்களுடைய கொள்கையில் உருவெடுப்பதாக குற்றச்சாட்டு

புலம்பெயர்ந்தவர்களின் தனி இராஜ்ஜியம் : யூதர்களுடைய கொள்கையில் உருவெடுப்பதாக குற்றச்சாட்டு

13ஆவது திருத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு இந்தியாவால் மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்சமயம் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் இல்லாவிட்டால் அரச திணைக்களங்களை எதிர்க்க முடியாது என்பதுடன், சிறிலங்கா படைகளும் பௌத்த தேரர்களும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடனான நேரடி சந்திப்பு : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு | Tamil National Parties Direct Meeting With Pm Modi

தமது யோசனை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஒரு கடித நகலை தாம் தயாரிக்கலாமா என்பதைத் தெரிவிக்குமாறும் சி.வி.விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் அனுமதி கோரியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆவது திருத்தத்தின் பலனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கூட்டு நடவடிக்கைக்கு தமது ஒப்புதலைக் காட்டுவதற்காகவேனும் தம்முடன் வர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இழிவான அரசியல் கலாசாரம் : மாறவேண்டும் என்கிறார் சுனில் ஹந்துனெத்தி

இலங்கையில் இழிவான அரசியல் கலாசாரம் : மாறவேண்டும் என்கிறார் சுனில் ஹந்துனெத்தி

தாம் யாரும் மோடியைத் தனித்தனியாகச் சந்திப்பதில் பயனில்லை எனக் கூறியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அனைவரும் ஒப்புதல் அளித்தால் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திப்பது தொடர்பான தமது இந்த யோசனை குறித்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்குமாறும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களிடம் குறித்த கடிதத்தின் ஊடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022