புலம்பெயர்ந்தவர்களின் தனி இராஜ்ஜியம் : யூதர்களுடைய கொள்கையில் உருவெடுப்பதாக குற்றச்சாட்டு
யூதர்களுடைய கொள்கையையே தற்போது புலம்பெயர்ந்தவர்கள் பின்பற்றுகின்றாக இலங்கைக்கான ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்துக்கான முன்னாள் தூதுவரான சரத் கொன்கஹகே குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், யூதர்களுடைய மனப்பான்மையை தற்போது புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுள்ளார்கள்.
அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு
தமக்கான இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள். இலங்கை நாடாளுமன்றத்திலும் இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டாமென கூறும் தரப்பினரும் இவ்வாறான யூதர்களே.
இது என்னுடைய கருத்து. இவ்வாறான மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். இலங்கையர்களாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.என குறிப்பிட்டார்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பின்னர் உலகம் முழுவதும் இருந்த யூதர்கள் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்னும் ஒரு புதிய நாட்டை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.