புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி!

Jaffna Gajendrakumar Ponnambalam S Shritharan ITAK
By Sathangani Jan 24, 2025 07:03 AM GMT
Report

புதிய அரசமைப்பு தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நிலைப்பாடு குறித்து  கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த கலந்துரையாடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் (Gajendrakumar Ponnambalam) இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நாங்கள் பரிசீலிப்போம் என சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna)- கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிரடியாக மாற்றப்பட்ட யாழ் கலாசார மையத்தின் பெயர்

அதிரடியாக மாற்றப்பட்ட யாழ் கலாசார மையத்தின் பெயர்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி! | Tamil National Parties Discussion Itak Stand Cvk

அரசமைப்பு வரைபு கலந்துரையாடல் மற்றும் கட்சிகளோடு பேசுவதற்கு ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டாலும் கூட கஜேந்திரகுமார் அழைத்த கூட்டத்தில் பங்குபற்றுவது தொடர்பில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை.

ஆனபடியால் அதில் எமது கட்சியினர் கலந்து கொள்வார்களா என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு முடிவு இல்லாதபடியால் அநேகமாகக் கலந்துக்கொள்வதற்கு சாத்தியங்கள் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

ஆனாலும், ஒரு சிலர் சென்று கலந்துகொள்கின்றார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. உண்மையில் பங்கேற்பதா? இல்லையா? என்று எந்த முடிவும் கட்சியினால் எடுக்கப்படவில்லை.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

சிறீதரனுடன் கலந்துரையாடல் 

கஜேந்திரகுமாரின் அழைப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை. ஆனால், காலப்போக்கில் பரிசீலிக்கலாம் என்ற முடிவோடுதான் இருந்தோம். ஆனால், 25 ஆம் திகதி கூட்டம் தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி! | Tamil National Parties Discussion Itak Stand Cvk

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நான் இருந்தாலும் கூட்டம் தொடர்பில் அறிவிப்போ, அழைப்போ எனக்குக் கிடக்கவில்லை. இதேபோன்று எமது கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அழைப்பு கிடைத்ததோ என்று எனக்குத் தெரியவில்லை.

சிறீதரன் எம்.பியிடம் (Shritharan) தான் குறித்த விடயம் கதைக்கப்பட்டது. அவரும் எம்முடன் இது பற்றி பேசியிருந்தார். ஆனாலும், கட்சிக்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டால் இதை நாங்கள் பரிசீலிக்கலாம்.

அதற்காகத்தான் குழு ஒன்றும் நியமிக்கபட்டுள்ளது. அப்படி அழைப்பு விடுக்கப்பட்டால் இதை நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம்.” என தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் முப்படை வசமுள்ள மக்கள் காணிகள் - சபையில் தமிழ் எம்.பி. கோரிக்கை

வடக்கு கிழக்கில் முப்படை வசமுள்ள மக்கள் காணிகள் - சபையில் தமிழ் எம்.பி. கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023