வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய வீரர்களின் 41ஆம் ஆண்டு நினைவு தினம்
தமிழ் தேசிய வீரர்களின் 41ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் வவுனியாவில் (Vavuniya) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா - வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தில் இன்று (27) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை (A.Thangathurai), தளபதி குட்டிமணி (Kuttimani), முன்னணி போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் போராளிகள் இதன்போது நினைவுகூரப்பட்டனர்.
அஞ்சலி நிகழ்வுகள்
மேலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளி ஜெகனிற்கு தீபமேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நினைவுப் பேருரை ஆற்றினார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் புருஸின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |