தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தமிழினத்துக்குப் பெரும்பலம்
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு ஒற்றுமைப்படுவதே தமிழினத்துக்குப் பெரும் பலமாக இருக்கும்.
ஒற்றுமையின் ஊடாக ஏற்படுகின்ற பலத்தைக் கொண்டு தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் எல்லோரும் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும். இன்றிருக்கின்ற நிலைமையில் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் தமிழ்த் தேசியத்திதுடன் பயணிக்கின்ற எமது வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தலில் அதற்கு மாறான பயணத்தில் ஈடுபட்டிருப்பதை காண முடிகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தைத் தவிர்த்துவிட்டு வடக்கை எடுத்துப் பார்த்தால் அதிலும் யாழ்ப்பாணம் மிக மோசமான முடிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை எதனை நோக்கி முன்னெடுக்கின்றீர்கள்? தலைப்பில் வருகிறது “களம்“ நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்