"இது சிங்கள மக்களின் மயானம்" பிக்குகள் தலைமையில் சூரையாடப்படும் தமிழர்களின் நிலங்கள் (படங்கள்)

Sri Lankan Tamils Tamils Vavuniya
By pavan Sep 15, 2023 03:54 PM GMT
Report

வவுனியா - கருப்பனிச்சாங்குளம் பகுதியில் சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்கும் நோக்கில் காணியை அளவிட வந்த நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக தமிழ் மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு இரு பிக்குகளின் தலைமையில் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களால் இன்று (15) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த நிலத்தை அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழி அகழ்வுப் பணி: திடீரென இடை நிறுத்தம்(படங்கள்)

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழி அகழ்வுப் பணி: திடீரென இடை நிறுத்தம்(படங்கள்)

கொக்குவெளி சிங்கள கிராம மக்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் ஆகும்.

குறித்த கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

"இது சிங்கள மக்களின் மயானம்" பிக்குகள் தலைமையில் சூரையாடப்படும் தமிழர்களின் நிலங்கள் (படங்கள்) | Tamil People Land Problem Sinhales Vavuniya

இந்நிலையில், கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள், இரு பிக்குகளின் தலைமையில் அந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்துள்ளனர்.

முன்பு மயானம் இருந்தமைக்கான சான்றுகள்

இது தொடர்பில் காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“இது எமது பரம்பரை வழியான காணி. இங்கு எமது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

"இது சிங்கள மக்களின் மயானம்" பிக்குகள் தலைமையில் சூரையாடப்படும் தமிழர்களின் நிலங்கள் (படங்கள்) | Tamil People Land Problem Sinhales Vavuniya

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எமது காணிக்கான அனுமதி பத்திரத்தை பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

இந்த காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை.

குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும்.

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

"இது சிங்கள மக்களின் மயானம்" பிக்குகள் தலைமையில் சூரையாடப்படும் தமிழர்களின் நிலங்கள் (படங்கள்) | Tamil People Land Problem Sinhales Vavuniya

தற்போது குறித்த காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்பாடாக தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் காவல்துறையினர் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் நடந்த வாள்வெட்டுச் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் நடந்த வாள்வெட்டுச் சம்பவம்

வன இலாகாவிற்குரிய காணி

குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.

"இது சிங்கள மக்களின் மயானம்" பிக்குகள் தலைமையில் சூரையாடப்படும் தமிழர்களின் நிலங்கள் (படங்கள்) | Tamil People Land Problem Sinhales Vavuniya

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் காவல்துறையினருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், “ இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம்.

மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும்” என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"இது சிங்கள மக்களின் மயானம்" பிக்குகள் தலைமையில் சூரையாடப்படும் தமிழர்களின் நிலங்கள் (படங்கள்) | Tamil People Land Problem Sinhales Vavuniya

எனினும், காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார்.

சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்துமாறு டக்ளஸ் தேவானந்தா உத்தரவு!

சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்துமாறு டக்ளஸ் தேவானந்தா உத்தரவு!

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி நுணாவில், நுணாவில்

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020