புலம்பெயர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் அரசியல் கைக்கூலிகள்!
புலம்பெயர்ந்து வாழும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மக்களுடைய காணிகள் அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர்களால் அபகரிக்கப்பட்டு தமக்கு ஆதரவானவர்களுக்கு வழங்கி வைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை மற்றும் பன்றிக்கெய்தகுளம் பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புலம்பெயர் மக்களுடைய காணிகள்
நீண்ட காலமாக குறித்த காணிகள் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களினால் பராமரிக்கப்படாமலும் இலங்கையில் வாழும் அவர்களது உறவினர்களுக்கு அதனை கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையினாலும் காணப்பட்டமையே இவ்வாறு அரசியல் பின்புலம் கொண்டவர்கள் காணிகளை அடாத்தாக பிடித்து தமக்கு ஆதரவானவர்களுக்கு வழங்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடரில் பிரதேச செயலகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் ஏனைய புலம்பெயர்ந்தவர்களின் காணிகளும் இவ்வாறான அரசியல் பலம் கொண்டவர்களின் செயற்பாடுகளினால் அபகரிக்கப்படும் பட்சத்தில் வீணான சமூக ஒற்றுமையின்மையினை ஏற்படுத்துவதற்கு வழி சமைக்கும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |