தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் : சுமந்திரன் வலியுறுத்தல்
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் (Vadamarachchi) கிளை அலுவலகத்தில் இன்று (14.04.2025) கட்சியின் ஆதரவாளர்களுக்கு கைவிசேடம் வழங்கி வைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில். “யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்கு கிடையாது.
தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தான் அந்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது என அராசாங்கம் சொல்ல தலைப்படுகின்றது.
இது ஒரு தவறான விம்பம். எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றில் முரன்பாடான தீர்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதீமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளதானது முறண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சட்டமா அதிபரே முன்னிலையாகியிருந்தார் , இரு தீர்புகளிம் முறண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. NPP யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் சண்டித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார்” என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
