அழியும் தறுவாயில் தமிழரின் பாரம்பரிய தொழில்! காத்திட உதவுமாறு கோரிக்கை
Tamils
Sri Lanka
By pavan
கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பேராறு இரண்டாம் கொலனி பகுதியில் ஐம்பது வருடங்களாக மட்பாண்டம் செய்யும் மூன்று சிறு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள மக்கள் ஆரம்ப காலம் தொட்டு இற்றை வரை இயந்திர வளங்கள் இன்றி இத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
தீர்வு
ஐம்பது வருட காலமாக மண்ணை காலால் மிதித்து பதப்படுத்தி மட்பாண்டம் செய்துவந்துள்ளதாகவும், தற்போது வயதாகியதால் மண்ணை காலால் மிதித்து பதப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது குறித்து கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு பல முறை அறிவித்த போதிலும் எங்களுக்கு தீர்வு பெற்றுத்தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே மண் பதப்படுத்தும் இயந்திரம் பெற்றுத்தருமாறும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி