தமிழ்த் தேசிய அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம்...! அநுரவுக்கு கிட்டிய வாய்ப்பு
பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்குக் குறைந்து வருவதாக அமெரிக்காவின் சாலிஸ்பரி (Salisbury) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், தமிழ்க்கட்சிகளுக்குள் அண்மைய காலமாக உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, தமிழ் மக்களுக்குக் கட்சிகள் மீதான நம்பிக்கை குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இவ்வாறான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு மிகவும் வாய்ப்பாக மாறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய அரசியல் களம், சர்வதேச அரசியல், உள்நாட்டு அரசியல் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துகளுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |