தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை - அமைச்சர் வெளியிட்ட தகவல்
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்கள் மீள ஒப்படைப்பு
இதேவேளை, கடந்த கால அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் நேற்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று 19 வாகனங்கள் விடுவிக்கப்பட்டதுடன், அதில் சுமார் 15 வாகனங்கள் முன்னறிவிப்பின் பேரில் அந்த இடத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெறப்பட்ட 08 வாகனங்கள், நிதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட 03 வாகனங்கள், தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தலா 01 வாகனம் என மொத்தம் 15 வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |