சுமந்திரன் -அநுர தரப்பிடையே தேர்தலுக்கு பின்னரான டீல்
தமிழ் அரசியல் வாதிகளின் சந்தர்ப்ப வாத அரசியலை தெரிந்து வைத்திருக்கும் உதயகம்பன்பில தமிழரசுக்கட்சி (ITAK) குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரின் கருத்தின் அடிப்படையில் சுமந்திரன் தரப்புக்கும் அநுர குமார (Anura Kumara Dissanayake) தரப்பிற்கும் பொதுத்தேர்தலுக்கு பின் புரிந்துணர்வு டீல் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு இவர்கள் கூற தமிழர்களின் வாக்குகளுக்காக தமிழ் அரசியல்வாதிகளும் பல அரிதார கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
தமிழர்களின் தனித்துவ கட்சியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த சந்தர்ப்ப வாத அரசியலுக்குள் சிக்கியதால் 2022 பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை இழந்தது.
சுமந்திரனின் (M. A. Sumanthiran) தொடர் வித்தைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தற்போது தமிழரசு கட்சியையும் சிதைவிட்டன.
தெற்கு அரசியலை பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலுடன் ஒதுங்கிக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் தனது ஆதிக்கத்தை இலங்கை அரசியலுக்குள் செலுத்துகின்றமை புலப்படுகின்றது.
மேலும், அவரின் கட்சியின் தேசிய பட்டியல் மூலம் அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லலாம் என்ற தகவல்கள் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |