தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் : நீதிமன்றம் வழங்கிய அறிவுரை

Tamils Vavuniya Tamil United Liberation Front
By Sathangani Jan 28, 2025 11:43 AM GMT
Report

தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) ஒரு தரப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கியதாக அந்தக் கூட்டணி மீது வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் சட்ட ரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் (28.01.2025) இந்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளை

கடந்த முறை எதிர்த்தரப்பினராகிய வீ.ஆனந்தசங்கரி (V. Anandasangaree) உட்பட ஏனையோர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி வழக்காளிகளால் கோரப்பட்ட நிவாரணங்களை வழங்குவதில் தங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று தெரிவித்திருந்ததுடன் இவ்வழக்கை சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேறு ஒரு தினத்தையும் கேட்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் : நீதிமன்றம் வழங்கிய அறிவுரை | Tamil United Liberation Front General Meeting Case

மேலும் சமாதனத்திற்காக இன்றைய நாளினை கோரியிருந்தாலும் கூட, சமாதானத்திற்கு முன்னரான தினமே இன்னுமொரு சட்டவிரோத கூட்டத்தினை கூட்டி அதில் சில தீர்மானங்களை எடுத்ததுடன் சில உறுப்பினர்களையும் கட்சியில் சேர்த்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது. ஏனெனில் நீதிமன்றத்தால் தடைக்கால கட்டளை வழங்கப்பட்டிருந்த போதும் அதனை மீறி தமிழர் விடுதலைக்கூட்டணியின் எதிராளிகளினால் குறித்த கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையானோர்

குறித்த கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சட்டவிரோதமானது எனக்கோரி அதனையும் இரத்துச்செய்யக்கோரி நீதிமன்றத்தில் கேட்டிருந்தோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் : நீதிமன்றம் வழங்கிய அறிவுரை | Tamil United Liberation Front General Meeting Case

நீதிமன்றமானது ஏற்கனவே வழங்கப்பட்ட தடைக்கால கட்டளைக்கு எதிரான வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் செயற்பட்டமையால் குறித்த கட்சியின் பொதுச்சபை கூட்டமானது, சட்டரீதியற்றது என்றும், இங்கே நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது.

இந்த நிலையில் மீண்டும் இவ்வழக்கானது விசாரணைக்காக ஏப்ரல் 30ம் திகதிக்கு தவனையிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்களான மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் மற்றும் கீர்த்தனன் ரவீந்திரநாதன் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் ஒன்றிணையவில்லை என்றால் அனைத்தும் கை மீறிவிடும்! சி.அ.ஜோதிலிங்கம்

தமிழ் மக்கள் ஒன்றிணையவில்லை என்றால் அனைத்தும் கை மீறிவிடும்! சி.அ.ஜோதிலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024