அநுர வகுத்துள்ள வியூகம்! அடிவாங்கும் தமிழ்த் தேசிய அரசியல்
150 ற்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றது தேசியமக்கள் சக்தியின் (NPP) வெற்றியல்ல, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 6 ஆசனங்களை பெற்றதே அவர்களின் வெற்றி என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் வாதிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு மீள வர வேண்டிய சூழ் நிலை உள்ளது.
இதன் மூலம் தென்னிலங்கையிலும் அவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்குக்கு இவர்கள் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வர்.
இளம் தலைமுறையினரை தங்கள் பக்கம் இழுத்து, சமஸ்டியை நோக்கிய பயணத்தை பலவீனப்படுத்துவார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்வியே கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமைக்கான காரணம் என கூறலாம்.
தமிழ்கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம் எனலாம். சுமந்திரன் (M. A. Sumanthiran) நாடளுமன்றில் இருக்க வேண்டிய ஒருவர்” என்றார்.
இது தொடர்பில் முழுமையான விபரங்களை காண கீழுள்ள காணொளியை காண்க.