தமிழ் பெண்ணின் சாதனை: வியப்பில் சர்வதேசம்!
"பிரதேசங்களுக்குள் நிறைய பிரச்சினைகள் இருகின்ற போதிலும், ஊடகங்களை சரியாக கையாள தெரியாமை காரணமாக வெளிவர வேண்டிய விடயங்கள் வெளிவராலும் தேவையற்ற விடயங்கள் பிரசுரமாவதையும் அவதானித்துள்ளேன்"என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி கிருஸ்ணராஜா செல்வி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38 ஆவது ஆண்டு பட்டமளிப்புவிழா நடைபெற்று வருகின்றது.
ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக ஊடகத்துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை பெற்றவர் தான் இரத்தினபுரி மாவட்டம் கொழும்புகாமம் என்ற இடத்தை சேர்ந்தவர் தான் கிருஸ்ணராஜா செல்வி.
அவர் ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சமூக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் ஊடக கற்கைகளை கற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இலக்கு ஒன்று இருக்குமாக இருந்தால் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்காது. தமிழர் சமூகத்திற்கு என்ன செய்யலாம் என்ற நோக்கத்தில்தான் ஊடகத்துறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.
பால்நிலை சமத்துவம் தொடர்பிலான பிரச்சினைகளை சரி செய்வது தான் எனது இலக்கு என்றார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |