காவல்துறையால் கொல்லப்பட்ட அஜித் குமார் : போராட்டத்தில் குதிக்கும் தவெக
மதுரை (Madurai) திருப்புவனம் பகுதியில் காவல்துறையின் சித்திரவதையால் அஜித்குமார் என்ற தனியார் பாதுகாப்புப் பணியாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
முன்னதாக குறித்த போராட்டத்தை ஜூலை 3ஆம் திகதி எழும்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால், குறித்த போராட்டம் பிற்போடப்பட்டது.
காவல்துறை அனுமதி
இந்தநிலையில் அஜித்குமாரின் மரணம் தொடர்பான தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்திற்கு, சென்னை மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய குறித்த போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
