புதிய பொதுச் செயலாளராக குகதாசன்! தெரிவு செல்லாது என அறிவித்த தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு)

Sri Lankan Tamils M A Sumanthiran S. Sritharan Sri Lanka
By pavan Jan 27, 2024 12:29 PM GMT
Report

புதிய இணைப்பு   

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அது தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குகதாசன் தெரிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக செயலாளர் தெரிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுச் செயலாளராக குகதாசன்! தெரிவு செல்லாது என அறிவித்த தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு) | Tamilarasu National Conference 2024 Sritharan

இதனையடுத்து நாளையதினம் நடைபெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடு மாவை சேனாதிராஜாவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நான்காம் இணைப்பு

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாம் இணைப்பு  

குகதாசனை பொதுச் செயலாளராக நியமிப்பதை நிராகரித்த பொதுக்குழு, வாக்கெடுப்பு கோர வேண்டும் என கூறிய நிலையில் மீண்டுமொரு விசேட கலந்துரையாடல் கட்சியின் நிர்வாகிகளுடன் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்த வரையில் யாப்பு விதிகளுக்கு அமைவாக பொதுக்குழுவிடமே அதிகாரம் காணப்படுகிறது. அந்த பொதுக்குழு அங்கீகரித்தால் தான் கட்சியின் ஏனைய பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட முடியும்.

இப்பொழுது பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலை உருவாகியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாம் இணைப்பு  

இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பான முக்கியபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுச் சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதேவேளை தமிழரசுக் கட்சியின் உப தலைவராக வடமாகாண சபை அவைத்தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான சீ.வீ.கே சிவஞானத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், போட்டியில்லாமல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்திலேயே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்றும், மாற்று வேட்பாளர் இருக்கும் பட்சத்தில் தேர்தல், வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றும் குகதாசன் நேற்றிரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

புதிய பொதுச் செயலாளராக குகதாசன்! தெரிவு செல்லாது என அறிவித்த தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு) | Tamilarasu National Conference 2024 Sritharan

மீண்டும் பரபரப்பாகும் தமிழ் அரசியல் களம்! திடீரென கூட்டப்பட்ட அவசர கூட்டம் (முதலாம் இணைப்பு)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடீரென இன்று மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை பேசுபொருளாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய குழுக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு நேற்றிரவு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைப் பதவி

கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது. இதில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளை பெற்று, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய பொதுச் செயலாளராக குகதாசன்! தெரிவு செல்லாது என அறிவித்த தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு) | Tamilarasu National Conference 2024 Sritharan

அதேவேளை, கட்சியின் தலைமைப் பதவியைப் சிறீதரன் தேசிய மாநாட்டில் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி

இன்று காலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி

இரவு விடுக்கப்பட்ட அழைப்பு

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பொதுச் செயலாளராக குகதாசன்! தெரிவு செல்லாது என அறிவித்த தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு) | Tamilarasu National Conference 2024 Sritharan

மத்திய குழு உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நேற்று இரவு அழைப்பு விடுக்கப்பட்டு இந்தக் கூட்டம் கூட்டப்படுகின்றமை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026