செம்மணிக்கு வருகிறது நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
Harshana Nanayakkara
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.
குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்
நீதிமன்றம் அறிவிக்கும்
அதன் அடிப்படையில் நாளைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை நீதிமன்றம் அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்