டெல்லியில் பரபரப்பாகிய கைது சம்பவம் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு இன்று நடந்தது. அதனையொட்டி நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது தடையை மீறி சென்றதாக காவல்துறையினர் அவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கண்டன பதிவு
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'போராட்டம் நடத்தியவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது' என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்… https://t.co/9azP1YuSKB
— M.K.Stalin (@mkstalin) May 28, 2023
