தமிழர்களின் இரத்த உறவை முற்றாக அறுக்க சூழ்ச்சி - சீமான் ஆதங்கம்

sri lanka seeman tamilnadu fisher men
By Vanan Feb 07, 2022 05:26 PM GMT
Report

தமிழர்களுக்குள்ளேயே பகைமூட்டும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக - இலங்கை மீனவர் விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளான தமிழ்த்தேசிய இன மக்களைத் தங்களுக்குள்ளேயே மோதிச்சண்டையிட வழிவகை செய்திடும் சிங்கள இனவாத அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஈழப்பெருநிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலிலே படுகொலை செய்தும் இன்னும் வன்மம் தீராது தமிழர்களுக்குள்ளேயே பகைமூட்டும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

யாழ்ப்பாணம் மாவட்டம், சுப்பர்மடம் கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவத்தம்பிகள் தணிகைமாறன், பிரேம்குமார் ஆகியோர் படகு கவிழ்ந்து உயிரிழந்த செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன். தம்பிகளை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பிகளின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்யவியலாதது. அம்மரணம் ஏற்படுத்தும் வலியென்பது சொற்களால் விவரிக்க முடியாதது.

அதேசமயம், அது விபத்துதானே ஒழிய, திட்டமிடப்பட்டத் தாக்குதல் அல்ல; தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்துச்சொந்தங்களை ஒருநாளும் பகையாளியாகக் கருதவோ, தாக்குதல் தொடுத்திடவோ மாட்டார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன். அது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கோர விபத்து; ஏற்கவே முடியாத ஒரு துயரச்சம்பவம். அத்துயரை நானும் பகிர்ந்துகொள்கிறேன்; வலியை முழுமையாக உணர்ந்துகொள்கிறேன்.

இம்மரணத்தைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, ஈழத்து மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் செயல்களுக்குப் பலியாகாது விழிப்போடும், தெளிவோடும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்து மீனவர்கள்தான் ஈழ மீனவர்களைத் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என அந்நிலத்தில் பரப்புரைசெய்வதும், தமிழகத்து மீனவர்களது படகுகளை ஈழத்து மீனவர்களுக்கு ஏலத்தில் விற்று, காழ்ப்புணர்வை தமிழக மீனவர்களிடம் உருவாக்க முயல்வதுமான போக்குகள் சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்த துடிக்கும் பெரும் மோசடித்தனமாகும்.

சிங்கள இனவாத அரசால் இனப்பேரழிவை தமிழர் தாயகம் எதிர்கொண்டபோது, தமிழகத்திலிருந்த 18 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காக்க தங்கள் உயிர்களை இரையாக்கினார்கள்; அவர்கள் தங்கள் உள்ளத்திலே கொதித்த நெருப்பை உடலிலே கொட்டி தீக்குளித்து, போராட்ட நெருப்பைப் பற்ற வைத்தார்கள். ஈழத்தாயகம் எப்போதெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் கொதித்தெழுந்து தங்கள் உறவுகளைக் காக்க உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது.

ஆகவே, தமிழகத்துக்கும், ஈழத்துக்குமான தொப்புள்கொடி உறவை, வரலாற்று வழித்தொடர்பை எவராலும் மறுக்க முடியாது. ஏற்கனவே, தமிழ்த்தேசிய இன மக்களை சாதியும், மதமும் பிளந்து, பிரித்து ஓர்மையைத் தடுத்துக் கெடுக்கும் நிலையில் அரங்கேற்றப்படும் சதிச்செயல்களையும், தமிழகத்து தமிழர்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்குமான இரத்த உறவை முற்றாக அறுக்கத்துடிக்கும் பெருஞ்சூழ்ச்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டியது பெருங்கடமையும், பேரவசியமாகிறது.

அந்நிலத்தில் தமிழ் மீனவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்; சிங்களர்களில் எவரும் மீனவர்கள் இல்லை என்பது போலவும், சிங்கள மீனவர்களது வளங்களை தமிழக மீனவர்கள் சுரண்டுகிறார்கள் என்பது போலவும், தமிழகத்து மீனவர்கள் சிங்கள மீனவர்களைத் தாக்குகிறார்கள் என்பது போலவும் கருத்துருவாக்கம் செய்து, இரு நிலத்து மீனவர்களையும் பகையாளிகளாக மாற்ற முனைவது கொடும் வன்மத்தின் உச்சமாகும்.

ஆகவே, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பிளவையும், பகையையும் உருவாக்கத் துடிக்கும் இனவெறி சிங்கள ஆட்சியாளர்களின் தமிழர் விரோதச்செயல்பாடுகளுக்கு இரையாகாது அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தமிழர் ஓர்மையையும், இணக்கப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டுமென இரு நிலத்தில் வாழும் தமிழர்களையும் உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025