வெற்றிகரமான பாதையில் யாழ் - சென்னை விமான சேவை..!
தமிழகத் தலைநகர் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானச்சேவை ஒரு வெற்றிகரமான பயணச்சேவையாக உருவாகியுள்ள நிலையில் இந்த விமானச்சேவையை வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பலாலி மார்க்கத்தில் விமானசேவையை நடத்தும் அலையன்ஸ் எயர் நிறுவனம் இன்று பலாலிக்குரிய 100வது விமானச் சேவையை நடத்தியதை முன்னிட்டு வரவேற்பு நிகழ்வொன்றையும் நடத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வான்போக்குவரத்து பலாலிக்கும் விரிவாக்கப்பட்டதையடுத்து அலையன்ஸ் எயர் நிறுவனம் இந்த சேவைகளை கடந்த 2019 முதல் ஆரம்பித்திருந்தது.
விமானச்சேவை

ஆயினும் கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் அந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதன் பின்னர் இந்த சேவை கடந்தவருட டிசம்பர்மாதத்தில் அலையன்ஸ் எயர் என்ற நிறுவனத்தால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அன்றிலிருந்துஇன்று வரை பிரான்ஸ் மற்றும் இத்தாலிய தயாரிப்பான ஏ.ரி.ஆர் ரக விமானம் ஊடாக இந்த விமானச்சேவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விமானச் சேவையால் 10500 க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று வரை பயனடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 தடவையாக அதிகரிக்க முயற்சி

அந்த வகையில் பலாலிக்கு இன்று தனது 100வது விமானச் சேவையை அலையன்ஸ் எயர் முன்னெடுத்திருந்திருந்தது.
இந்த நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாண விமான நிலையத்தில் விசேட வரவேற்பு நிகழ்ச்சியொன்றும் நடத்தபட்டிருந்தது. இந்த விமானச் சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடனும் வர்த்தக மற்றும் முதலீட்டை ஊக்குவித்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதாக கருதப்படுகிறது.
தற்போது இந்த விமானச் சேவையானது வாரத்தில் 4 தடவை இடம் பெற்று வரும் என தெரித்திருந்த வேளையில் மேலும் 7 தடவையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்