அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்! எதிர்ப்பை வெளிப்படுத்தும் டக்ளஸ் தரப்பு

Sri Lankan Tamils Tamils Jaffna Election
By Shadhu Shanker Apr 09, 2024 11:33 AM GMT
Report

நாட்டின் அதிபராக ஒருவர் தெரிவான பின்னர், அவரிடம் சென்று தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பேசி, தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதற்கே வரவுள்ள அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்தும் சில தமிழ் அரசியல் தரப்பினரது செயற்பாடுகள் அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் தேவை

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டினது சமகால அரசியல் சூழலுக்கேற்ற வகையில் குறித்த ஒரு தரப்பினர் அல்லது தரப்பு வெற்றிபெறும் வேட்பாளராக இருப்பார் என தெரிந்திருந்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள அதிபர் அபேட்சகரையே இன்றுவரை தமிழர் தரப்பிலிருந்து ஆதரிக்கப்பட்டுவரும் துர்ப்பாக்கியமான வரலாறு இருந்து வருகின்றது.

அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்! எதிர்ப்பை வெளிப்படுத்தும் டக்ளஸ் தரப்பு | Tamils Problem Srilanka President Election 2024

அதாவது தமிழ் மக்களுக்கும் வெற்றிபெற்று நாட்டின் அதிபராக தெரிவாகவுள்ளவருக்கும் இடையே புரிந்துணர்வு அற்றவகையில், அல்லது நேரடியாக சென்று தமிழ் மக்களின் தேவைகளை பேரம்பேசி பெற்றுக்கொள்ள இயலாதவகையில் தமது சுயநல அரசியலை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினரால் என்றுமே தமிழ் மக்கள் நன்மைகளை பெற்றுக்கொண்டது கிடையாது.

ஆனால் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஏதாவதொரு காரணத்தை கூறி தமது தெரிவு இவர்தான், இவரை ஆதரியுங்கள் என்று கூறி தமிழ் மக்களை ஆதரிக்குமாறு திசைதிருப்பி வருகின்றனர்.

அதிபர் தேர்தல்

இந்நிலையில் தற்போது வரவுள்ள அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நிலை மாறி தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவுசெய்து நிறுத்துவது தொடர்பில் சில தமிழ் கட்சிகள் முனைகின்றனர்.

அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்! எதிர்ப்பை வெளிப்படுத்தும் டக்ளஸ் தரப்பு | Tamils Problem Srilanka President Election 2024

இதேநேரம் சிலர் பொது வேட்பாளர் தேவையறற்றது என கூறுகின்றனர். ஆனால் சிலர் சுயநலன்களுக்காக தமி்ழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பதனூடாக தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இல்லாது செய்து பிரச்சினைகளை நீடித்த பிரச்சினையாக வைத்தக்கொள்வதற்கே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாறாக இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, அல்லது கூட வந்த குரங்கு ஆண்டால் என்ன என்றிராது நாங்கள் ஜனநாயக ரீதியில் நாட்டின் தலைமையை தெரிவுசெய்வதனூடாக எமது அரசியலுரிமையை பேசுவதாற்கான முகாந்தரத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

பொது வேட்பாளர்

அதேநேரம் நாட்டிலுள்ள அரசியல் முறைமையில் தமிழர் தரப்பால்அதிபராக தெரிவாகக் கூடிய அல்லது வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றே கூறலாம்.

அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்! எதிர்ப்பை வெளிப்படுத்தும் டக்ளஸ் தரப்பு | Tamils Problem Srilanka President Election 2024

எனவே இந்த தமிழ் தரப்பினரின் பொது வேட்பாளர் தெரிவென்பது தேவையற்ற ஒன்றாக இருப்பதுடன் அதனை முன்வைப்பதும் பயனற்றதாகவே இருக்கும்.

மாறாக தமிழ் மக்கள் பேரம்பேசி தமது வாக்குகளை வெற்றிபெறக் கூடிய தரப்புக்கு வழங்கி அவரை ஆதரித்தால் நிச்சயமாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கம் என்பதே எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015