தமிழர்களுக்கான தீர்வு: ஜோ பைடனிடம் கோரிக்கை(படங்கள்)

Tamils Vavuniya Joe Biden Human Right Day
By Shadhu Shanker Dec 10, 2023 10:54 AM GMT
Report

இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் கிளாரி கிளிண்டனை சிறப்புத்தூதராக நியமிக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் தினமான இன்று(10) வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த சங்கத்தால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

“மனித உரிமைகள் தினம் எமக்கு துக்க தினம்”முல்லையில் போராட்டம்(படங்கள்)

“மனித உரிமைகள் தினம் எமக்கு துக்க தினம்”முல்லையில் போராட்டம்(படங்கள்)

இலங்கை தமிழர்களின் வரலாறு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. “மனித உரிமைகள் என்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கியது, வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் கருத்துசுதந்திரம் கலாச்சாரத்தில் பங்கேற்கும் உரிமை, உணவுக்கான உரிமை, வேலை மற்றும் கல்வி பெறும் உரிமை உள்ளிட்ட சமூக, கலாச்சார பொருளாதார உரிமைகளை உள்ளடக்கியது.

தமிழர்களுக்கான தீர்வு: ஜோ பைடனிடம் கோரிக்கை(படங்கள்) | Tamils Protest In Vavuniya Request President Biden

இலங்கையில் உள்ள தமிழர்களின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேலானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இப்போது சிங்களர்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும் இந்த நிலமை நீடித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீதி மற்றும் சமத்துவத்துக்கான தமிழர்களின் போராட்டம், அநீதிகள் மற்றும் மீறல்களை வரிசையாக எதிர்கொண்டது, அது அவர்களின் ஒட்டுமொத்த நலன்களை வெகுவாகக் குறைத்துள்ளது.

கனடா செல்லும் மாணவர்களுக்கு பேரதிர்ச்சி

கனடா செல்லும் மாணவர்களுக்கு பேரதிர்ச்சி

உரிமைகளை மீட்டெடுக்க நடவடிக்கை

தமிழர் அல்லாத ஆட்சியாளர்களிடம் இருந்து விடுபட்டு மனித உரிமைகளை மீட்டெடுக்க நாம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களுக்கான தீர்வு: ஜோ பைடனிடம் கோரிக்கை(படங்கள்) | Tamils Protest In Vavuniya Request President Biden

கொசோவா, போஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடான் போன்ற கடந்த கால நிகழ்வுகளில் பார்த்தது போல், சர்வதேச ஆதரவு எமக்கு முக்கியமானது.

சுயநிர்ணய உரிமையை அடைவதற்கும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தமிழர்களான நாம் அவசரமாக உதவிகளை நாடிநிற்கின்றோம்.

உரிமைகளை ஆதரிப்பது முக்கியம்

எனவே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒரு நிலைப்பாட்டை எடுத்து எமது உரிமைகளை ஆதரிப்பது மிகவும் முக்கியமானது.

எமக்கான பாதுகாப்பு, கண்ணியம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தவகையில் செயலாளர் கிளாரி கிளின்டன் இலங்கையைப் பற்றி மிகவும் அறிந்தவர் என்றும், இந்த பணியை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவில் மிகவும் பொருத்தமானவர் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023