பங்களாதேஷில் சிக்கிய தமிழர்கள் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
பங்களாதேஷில்(bangladesh) ஏற்பட்டுள்ள கலவரத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 120 பேர் பலியானதை அடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் இறக்கி விடப்பட்ட மாணவர்கள்
இந்த நிலையில் பங்களாதேஷ் எல்லையில் தமிழக மாணவர்களை கல்லூரி பேருந்து மூலம் இறக்கிவிட்டுச் சென்றதாக தகவல் வெளியானது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 2 விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் இன்று தாயகம் திரும்ப உள்ளனர்.
அழைத்து வர நடவடிக்கை
விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 2ம் கட்டமாக 60 பேரை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி, இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு தமிழர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. என கூறப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |