தமிழர்கள் மாத்திரமே ரணிலுக்கு வாக்களிப்பார்கள்...! ராஜபக்சக்களின் விசுவாசி சீற்றம்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிடுவதாக இருந்தால் தமிழர்கள் மாத்திரமே அவருக்கு வாக்களிப்பார்கள் என ரஷ்யாவுக்கான இலங்கையின் (srilanka) முன்னாள் தூதுவரும் ராஜபக்சகளின் குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மொட்டுக் கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நிபந்தனை அடிப்படையில் தேர்வு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் செயற்பட்டார்.
கட்சியின் உறுப்பினரே வேட்பாளர்
அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்கள் மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.
இதற்கமைய பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |