தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வு வேண்டும் : மோடியிடம் தமிழ் எம்.பி கோரிக்கை
ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமில்லை எனவும் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வு வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதை இந்திய அரசு விளங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று (05) கொழும்பில் (Colombo) இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் சி.வி.கே சிவஞானம் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
