அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் முக்கியமான விருதை தன்வசப்படுத்திய தமிழர்!
டார்டெக்கினுடைய (TARDEC) காலாண்டுக்கான மிகச்சிறந்த பாதுகாப்பு துறை விஞ்ஞானியாக டொக்டர்.பரம்சோதி ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டொக்டர்.பரம்சோதி ஜெயக்குமார் ஆறு ஆண்டுகளாக டார்டெக்(TARDEC) உடன் இணைந்து கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் (California Institute of Technology) பணியாற்றியுள்ளார்.
அதில், தன்னியக்க ஒன் ரோட்(on road) மற்றும் ஓப் ரோட் (off road) தரை வாகனத் தயாரிப்பு தொடர்பில் ஆய்வு செய்வதில் தனது நேரத்தை செலவளித்துள்ளார்.
டொக்டர்.பரம்சோதி ஜெயக்குமார்
தன்னியக்க மற்றும் நவீன தொழிநுட்ப திறன் வாய்ந்த வாகனங்களை தயாரித்து வெளியிடுவதில் தீவிரம் காட்டும் டொக்டர் ஜெயக்குமார், 125 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வெளியீடுகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளதுடன், ஏராளமான விருதுகளையும் தன்னியக்க பொறியியலாளர்களுடன் இணைந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விருது குறித்து டொக்டர். ஜெயக்குமார்
குறித்த விருது தொடர்பில் டொக்டர்.பரம்சோதி ஜெயக்குமார் தெரிவிக்கையில், விருது கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனது வெற்றிக்கு நண்பர்கள், ஒத்துழைப்பாளர்கள், வழிகாட்டிகள், தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரிடமிருந்து கிடைத்த பங்களிப்புகள் மற்றும் ஆதரவுதான் காரணம் எனத் தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்