ஐபோன் 18 ப்ரோ ரகசியங்கள் கசிவு: டாடா நிறுவனத்திடம் இந்திய அரசு விசாரணை

iPhone TATA Technology
By Shalini Balachandran Jul 04, 2026 11:05 AM GMT
Report

டாடா இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தரவு கசிவு மற்றும் அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் இன்னும் சந்தைக்கு வராத ஐபோன் 18 ப்ரோ மாடல் தொடர்பான ரகசிய விபரங்கள் கசிந்துள்ளமை குறித்து இந்திய அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து முதன்முறையாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தரான டாடா இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரான்சம்வேர் (Ransomware) சைபர் தாக்குதல் மூலம் ஐபோன் 18 ப்ரோவின் பாகங்கள் அடங்கிய பட்டியல், விநியோகஸ்தர்களின் விபரங்கள் மற்றும் அதன் புகைப்படங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப் (Dark Web) இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம்

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம்

தொழில்நுட்ப அமைச்சகம்

இந்தநிலையில் இது குறித்து விசாரித்து வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த விவகாரம் இந்தியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு முகமையான கம்ப்யூட்டர் அவசரக்கால பதிலளிப்புக் குழுவிடம் (CERT-In) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபோன் 18 ப்ரோ ரகசியங்கள் கசிவு: டாடா நிறுவனத்திடம் இந்திய அரசு விசாரணை | Tata Electronics Data Breach Iphone 18 Pro

ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச விநியோகச் சங்கிலியை மிகவும் ரகசியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்கும் நிலையில் இந்தத் தரவு கசிவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்

கசிந்துள்ள கோப்பு

இந்நிலையில், கசிந்துள்ள கோப்புகளில் குறிப்பிட்ட பாகங்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் தொடர்பான குறைந்தது ஆறு முக்கியமான ஆவணங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபரங்களை ஆப்பிள் நிறுவனம் பொதுவாகப் பகிரங்கப்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐபோன் 18 ப்ரோ ரகசியங்கள் கசிவு: டாடா நிறுவனத்திடம் இந்திய அரசு விசாரணை | Tata Electronics Data Breach Iphone 18 Pro

இந்தத் தரவுக் கசிவைத் தொடர்ந்து டாடா இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தடயவியல் தணிக்கை (Forensic audit) ஒன்றை மேற்கொள்வதற்காக சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்றை நாடியுள்ளது.

இந்த சைபர் தாக்குதலில் டெஸ்லா (Tesla), குவால்காம் (Qualcomm) மற்றும் டிஎஸ்எம்சி (TSMC) ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள பாடத்தில் S தேர்ச்சி! தகுதி இன்றிய யோஷிதவுக்கு கரன்னாகொடவால் வாய்த்த பிரித்தானிய பயணம்

சிங்கள பாடத்தில் S தேர்ச்சி! தகுதி இன்றிய யோஷிதவுக்கு கரன்னாகொடவால் வாய்த்த பிரித்தானிய பயணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026