இறைவரித் திணைக்களத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெற்றி

Cricket Sri Lanka Cricket
By Dharu Aug 31, 2026 08:14 AM GMT
Report

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தனிநபர் முன்கூட்டிய வருமான வரியை (Personal Advance Income Tax) அரவிடுவது குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எடுத்திருந்த தீர்மானத்தை இரத்து செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் சான்றாணை (Certiorari) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் முன்வைக்கபட்ட குற்றச்சட்டுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ள ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள், தத்தமது அணித் தலைவர்கள் ஊடாக நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் - மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை

7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் - மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை

ஊழியர்களுக்கான வரி விதிமுறை

தாங்கள் இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் அல்ல என்றும், பல ஆண்டுகளாக சுயாதீன சேவை வழங்குநர்களாகவே அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் வீரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டினர்.

இறைவரித் திணைக்களத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெற்றி | Tax Collection From Slc Players Is Prohibited

எனவே, தங்களிடம் அறவிடப்படும் வரியானது ஊழியர்களுக்கான வரி விதிமுறைகளின் கீழ் அல்லாமல், சுயாதீன சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும் சட்ட விதிகளின் அடிப்படையில் அறவிடப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.

இதன்படி  இலங்கையின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

எனினும், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்தத் தீர்ப்பு தடையாக அமையாது என நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமராகும் எண்ணத்தில் முதல்வர் விஜய்..! உண்மையை உடைக்கும் வைகோ

இந்திய பிரதமராகும் எண்ணத்தில் முதல்வர் விஜய்..! உண்மையை உடைக்கும் வைகோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026