எத்தனை வரி விதித்தாலும் பயனில்லை - பொதுஜன பெரமுன உறுப்பினர் ஆதங்கம்
வரிவிதிப்பு முறை சரியாகச் செயல்படவில்லை என்றால், எத்தனை வரி விதித்தாலும், புதிய வரி விதித்தாலும் எந்தப் பயனும் ஏற்படாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கையின் வரி முறையை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து மீளமைக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சிறிலங்கா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவனங்களில் வினைதிறன் இன்மை, ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலேபொட இதன்போது தெரிவித்தார்.
சில பட்டயக் கணக்கியல் நிறுவனங்கள் அரசாங்கத்தின் வரி வருவாயைப் பறிக்க வணிகர்களை நேரடியாகத் தூண்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
