வரி அடையாள இலக்கம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை வழங்க அரசாங்கம் தயாராகிறது.
அனைத்து குடிமக்களும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கும் வரி இலக்கம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தரவுகள் கணனி மயமாக்கப்பட்டு வரி தொடர்பான செயற்பாடுகள் வலுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள இலக்கம்
அதேவேளை, வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது, "உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள இலக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் TIN இலக்கத்தைப் பெறலாம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |