புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்திற்கும் வரி: அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தவறான செய்தி பரவி வருவதாக பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ (A. Anil Jayanta Fernando) குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு 15% வரி விதிக்கப்படும் என்று செய்தித்தாலொன்று தவறான செய்தி வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவுசெலவுத் திட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், இது அரசாங்கத்தின் நற்பெயருக்கும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சராக தனது நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பத்திரிகைக் கட்டுரை தன்னை மேற்கோள் காட்டி தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பத்திரிகையின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் இந்த விஷயத்தைக் கொண்டுவருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
