நீதிபதிகளுக்கான சம்பளத்தில் வரி - நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Sri Lanka Magistrate Court
By Sumithiran
நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வருமான வரி செலுத்துவதை தடை செய்த உத்தரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் ஆகியவற்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி மரிக்கார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி