மக்கள் செலுத்தும் வரி அரசாங்கத்துக்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா : கோப் குழு கேள்வி!

Sri Lanka Income Tax Department Cope Committee Sri Lanka
By Beulah Nov 19, 2023 01:42 AM GMT
Report

பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் செலுத்தும் பெறுமதி சேர் வரி (வற்) அரசாங்கத்துக்கு முறையான வகையில் கிடைக்கப்பெறுகின்றதா என்பது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் வினவப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நேற்று கூடிய போதே மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பெறுமதி சேர் வரி 

தற்போது சுமார் பதின்மூன்றாயிரம் நிறுவனங்கள் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் உரிய வரியை அரசுக்கு செலுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு!

இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு!

மக்கள் செலுத்தும் வரி அரசாங்கத்துக்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா : கோப் குழு கேள்வி! | Tax Paid Properly Available Government Cope Sl

பொது மக்களிடமிருந்து வரி அறவிடும் நிறுவனங்கள் அந்த வரி முறையாக அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெறுவதற்கான பொறிமுறையை தயாரிக்க வேண்டும் என இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

கணினிக் கட்டமைப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பேற்றுப் பராமரிக்க முடியுமா ? என குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட மனிதவளம் முறையாகக் கிடைக்காத நிலையில் அந்தக் கட்டமைப்பைப் பொறுப்பேற்றுப் பராமரிக்க முடியாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் அறிவித்தனர்.

கணினிக் கட்டமைப்புடன் 6 நிறுவனங்கள் இணைந்து செயற்படுவதுடன் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் ஒருசில தொழில்நுட்பக் காரணங்களுக்காக கணனி கட்டமைப்புடன் இணைவது தாமதமடைந்துள்ளதாக குழுவில் புலப்பட்டது.

அதற்கமைய,உடனடியாக தமது கணினிக் கட்டமைப்பில் சம்பந்தப்பட்ட இற்றைப்படுத்தலை மேற்கொண்டு கணனி கட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு குழு பரிந்துரை வழங்கியது.

அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

புதிய வரி செலுத்துபவர்கள்

தற்பொழுது பல வகைப்படுத்தல்களின் கீழ் அறவிடப்படும் வரி தொடர்பான முழுமையான அறிக்கையொன்றையும், அறவிடப்படவுள்ள 943 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை தொடர்பான முழுமையான அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

மக்கள் செலுத்தும் வரி அரசாங்கத்துக்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா : கோப் குழு கேள்வி! | Tax Paid Properly Available Government Cope Sl

புதிய வரி செலுத்துபவர்களின் பதிவு குறித்தும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, 2023 இல் இதுவரை ஒரு இலட்சத்து 98,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 வயதுக்கு அதிகமான பிரஜைகள் சுமார் 16 மில்லியன் பேர் உள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை வரி செலுத்தும் செயற்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்கு விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஹமாஸை அலறவிட இஸ்ரேல் எடுத்த அஸ்திரம்

ஹமாஸை அலறவிட இஸ்ரேல் எடுத்த அஸ்திரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024