புறந்தள்ளப்பட்ட சிறிலங்கா..! 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சிரியா இந்தியாவிடம் தேயிலையை கொள்வனவு செய்யும் சிரியா

Sri Lanka Economic Crisis India
By Kanna Oct 28, 2022 09:50 PM GMT
Report

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சிரியா, இந்தியாவிலிருந்து தேயிலையை கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,சிரியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் காரணமாக, சரக்குகள் லெபனான் வழியாக அனுப்பப்படுகின்றன என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இலங்கையில் இருந்து சந்தைக்கு தேயிலை இல்லாத நிலையில் இந்தியாவில் இருந்து பெருமளவு மரபுவழி தேயிலையை கொள்வனவு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேயிலை பெய்ரூட் வழியாக சிரியாவுக்கு செல்கிறது மற்றும் வேறு சில நாடுகள் வழியாக கட்டணம், இந்தியாவுக்கு செலுத்தப்படுகிறது.

புறந்தள்ளப்பட்ட சிறிலங்கா..! 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சிரியா இந்தியாவிடம் தேயிலையை கொள்வனவு செய்யும் சிரியா | Tea Export From India To Siriya

சிரியாவில் மரபு ரீதியான(ஒர்த்தடொக்ஸ்); தேயிலைக்கான கேள்வி சிறப்பாக இருப்பதாக இந்திய தேயிலை ஏற்றுமதி நிறுவனமான பன்சாலி அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அனிஷ் பன்சாலி தெரிவித்துள்ளார்.

ஒர்த்தடொக்ஸ் தேயிலை என்பது மரபுரீதியான தேயிலையைக் குறிக்கிறது, இது பாரம்பரிய அல்லது மரபுவழி முறைகளான பறித்தல், வாடுதல், உருட்டுதல்,மற்றும் உலர்த்துதல் போன்ற முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

ஒர்த்தடொக்ஸ் தேயிலையின் உலகளாவிய வர்த்தகத்தில் பாதியை இலங்கை கொண்டுள்ளது. ஏனினும் நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இலங்கையின் தேயிலை சந்தையில் இல்லாதது இந்தியா மரபுவழி தேயிலை நுகர்வு நாடுகளுக்குள் நுழைவதற்கு உதவியுள்ளது.

இந்திய தேயிலை சபையின் புள்ளிவிபரங்களின்படி. 2021 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 48.11 மில்லியன் கிலோவுடன் ஒப்பிடும்போது, 2022 ஜனவரி-ஜூலையில் இந்தியாவின் ஒர்த்தடொக்ஸ் தேயிலை ஏற்றுமதி மொத்தம் 57.70 மில்லியன் கிலோவாக இருந்தது.

இலங்கையால் சந்தைப்படுத்தமுடியாத சந்தைகளிலேயே இந்திய தேயிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகள் பெருமளவு மரபுவழி தேயிலைகளை கொள்வனவு செய்கின்றன.

2021ல் 196.54 மில்லியன் கிலோவாக இருந்த இந்திய தேயிலையின் ஏற்றுமதி, 2022ல் (ஒர்த்டொக்ஸ் மற்றும் விரைவான தொழில்நுட்ப(சிடிசி) இரண்டையும் சேர்த்து) 225 மில்லியன் கிலோவைத் தாண்டும் என்று நம்புவதாக ஆசிய தேயிலை நிறுவனத்தின் இயக்குனர் மோஹித் அகர்வால் கூறியுள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016