தேயிலைத் தோட்டங்கள் குறித்து விவசாய அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டிலுள்ள பராமரிக்கப்படாத தேயிலை தோட்டங்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை தேயிலைச் சபைக்கு விவசாய மற்றம் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) அறிவுறுத்தல் விடுத்துள்ளாார்
குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தேயிலை தோட்டங்கள் தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரிய முறையில் பராமரிக்கப்படாத தேயிலை தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தங்களை முடிவுறுத்தி மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை சபை அறிவிப்பு
தேயிலை தோட்டங்களை அரசாங்கம் குத்தகை அடிப்படையில் 28 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே உரிய முறையில் தோட்டங்களை பராமரிப்பதாக தேயிலை சபை, அமைச்சருக்கு அறிவித்துள்ளது
தேயிலை தோட்டங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் தேயிலை செய்கையை உரிய முறையில் மேற்கொள்வதில்லை எனவும் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேயிலை உரம் வழங்குதல்
தேயிலை செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 12,000 மில்லியன் ரூபா பெறுமதியான தேயிலை உரத்தை மானியமாக வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் உரத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |