ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது
                                    
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka Economic Crisis
                
                                                
                    President of Sri lanka
                
                        
        
            
                
                By Aadhithya
            
            
                
                
            
        
    சிறிலங்கா அதிபரின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 09 அன்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட் சந்தேக நபர் களுத்துறை (Kalutara) மாவட்டத்தின் கிரந்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்
இந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும், அதிபரின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தமை தொடர்பில் இதுவரை 25க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        