போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஆசிரியை கைது
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை மொரட்டுவை (Moratuwa) பிரதேசத்தில் நேற்று (16.07.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண் மொரட்டுவை பிரதேச பாடசாலையொன்றில் நடன ஆசிரியையாக கடமையாற்றுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம்
மொரட்டுவை நகரில் பெண்ணொருவர் போலி நாணயத்தாள்களை மாற்ற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணைக் கைது செய்து விசாரித்துள்ளனர்.
அதன்போது அவரிடம் இருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 10 கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் வசித்த வீட்டைச் சோதனையிட்ட போது 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 19 மற்றும் அவற்றை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

